உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன் மற்றும் எஸ்.பி.,க்கள், கல்வி, சமூக நலம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன், இம்மாதம் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறித்தார். இதில், போலீசார் 4 வழக்குகள் பதிந்து 14 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து, 6 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர். கல்வித்துறை சார்பில், 40க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின், கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில் 'பள்ளி கல்லுாரிகளுக்கு அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அமைந்துள்ள கடைகளில் போதைப் பொருட்கள் குறித்து அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டும். கடற்கரை பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் அதிக இடங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா புதுச்சேரியை உருவாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !