உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேற்கூரை காரை விழுந்து கல்லுாரி மாணவி படுகாயம்

மேற்கூரை காரை விழுந்து கல்லுாரி மாணவி படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி, கோரிமேடு, இந்திரா நகர் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மைக்ரோபயாலஜி, இரண்டாம் ஆண்டு மாணவி நேற்று மதியம், 1:00 மணிக்கு கழிப்பறைக்கு சென்றார்.அப்போது, மழை காரணமாக சேதமடைந்திருந்த கழிப்பறையின் மேல்தள சிமென்ட் காரை பெயர்ந்து மாணவி மீது விழுந்தது. படுகாயமடைந்த மாணவியின் அலறல் கேட்டு, சக மாணவியர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவத்தை கண்டித்து கல்லுாரி மாணவ - மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களிடம் பேச்சு நடத்திய எஸ்.பி., வீரவல்லவன் மற்றும் போலீசார், அதிகாரிகளிடம் பேசி புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ