உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

புதுச்சேரி; கல்லுாரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, நாவற்குளம், அன்னி பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் கமலாஸ்ரீ, 19; மகளிர் கல்லுாரியில் பி.எஸ்சி., தாவரவியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 26ம் தேதி வழக்கம்போல், கல்லுாரிக்கு சென்ற கமலாஸ்ரீ, இதுவரையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் தோழிகளிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை