உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

புதுச்சேரி: வேலைக்கு சென்ற கல்லுாரி மாணவி மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவாண்டார்கோவில், பெரியபேட் பகுதியைச் சேர்ந்தவர் ராகவி, 18. இவர், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பி.ஏ., எகானமிக்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், செமஸ்டர் விடுமுறையில் வீட்டில் இருந்ததால் வில்லியனுாரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை