மேலும் செய்திகள்
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
27-Dec-2025
புதுச்சேரி: மாடுகளுக்கு குடற்குபுழு நீக்கம் பற்றி, மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில், மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் தினகரன், துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் செ ல்வமுத்து ஆகியோர் குடற்புழு நீக்கம் பற்றி விளக்கம் அளித்தனர். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் ஐயன் ஈஸ்வரன், ஞானபிரசாத், ஹரிசுதன், கிரிகரன், ஜுவன் குமார் ஆகியோர் குடற்புழு நீக்கத்தின், அவசியம், அவற்றின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, செயல் விளக்கம் அளித்தனர். சேர்மன் முகமது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட அலுவலர் செல்வகணபதி ஆகியோர் மேற்பார்வையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
27-Dec-2025