உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வணிகவரித் துறை அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வணிகவரித் துறை அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி: வணிக வரித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ராஜிக்கு பணி நிறைவு பாராட்டு விழா துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது. புதுச்சேரி வணிகவரித்துறையில் 38 ஆண்டுகளாக வணிகவரி அதிகாரியாக ராஜி பணியாற்றினார். இவர் நேற்று ஒய்வு பெற்றார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வணி வரித்துறை செயலர் மற்றும் ஆணையர் யாசின் முகமது சவுத்திரி, பணி ஒய்வு பெற்ற ராஜிக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வணிகவரித் துறை துணை ஆணையர் ஆதர்ஷ், உதவி ஆணையர் ரேவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அதிகாரிகள் சவரணகுமார், அஸ்மா, தேவி ராஜலட்சுமி, சீனுவாசன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பணி ஓய்வு பெற்ற வணிகவரித் துறை அதிகாரி ராஜி ஏற்புரை வழங்கி, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி