உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேட்ரிக் பள்ளியில் ‘காமர்ஸ் கனெக்ட்’ நிகழ்ச்சி

பேட்ரிக் பள்ளியில் ‘காமர்ஸ் கனெக்ட்’ நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘காமர்ஸ் கனெக்ட்–26’ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சென்னையை சேர்ந்த இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினர் அழகுராஜா தலைமை தாங்கினார். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்று, தங்களது வணிகத் திறன்கள், குழு ஒருங்கிணைப்பு, தலைமைப்பண்பு மற்றும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் மண்டல வணிகவியல் துறைத் தலைவர் அருள்முருகன் வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பிரட்ரிக் ரெஜிஸ் வழிகாட்டுதலின்படி முதல்வர் ஸ்டெல்லா முன்னிலையில் வணிகவியல் ஆசிரியர்கள் யூஜின் மற்றும் லக்ஷ்மி நாராயணி ஆகியோர் செய்திருந்தனர். இதில், மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ