உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து ஆணையர் ஆய்வு

கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து ஆணையர் ஆய்வு

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வது தொடர்பாக, ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக நீர் நிலைக்கு சென்று கலப்பதால், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நீர்வளமும் பாதிக்கிறது. மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள கிராமப்புற வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் மூலம் சுத்திகரிப்பு செய்து குளம், ஏரி, வாய்க்காலில் விடுவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் சென்னையை சேர்ந்த பிளான்ட் டிசைனர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பி.எஸ். பாளையம், திருக்கனுார், கூனிச்சம்பட்டு, மண்ணாடிபட்டு, வாதானுார், சோம்பட்டு ஆகிய கிராமங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி