உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆணையர் அழைப்பு

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆணையர் அழைப்பு

பாகூர்: பாகூர் கொம்யூனுக்குட்பட்ட, 14 கிராம பஞ்சாயத்துக்களில் நாளை (2ம் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது.இது குறித்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2ம் தேதி, பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட பரிக்கல்பட்டு, மதிக்கிருஷ்ணாபுரம், பனித்திட்டு கிராம பஞ்சாயத்திலும் கடுவனுார், குருவிநத்தம், பிள்ளையார்குப்பத்தில் கிராம சபை கூட்டம் காலை 9.30 மணிக்கும், பரிக்கல்பட்டு, மதிக்கிருஷ்ணாபுரம், பனித்திட்டில் 10.00 மணிக்கு நடக்கிறது.இதேபோல், காலை 10.30 மணிக்கு, கரையாம்புத்துார், சோரியாங்குப்பம், பாகூர் கிழக்கு, பாகூர் மேற்கிலும் காலை 11.00 மணிக்க சேலியமேடு, கிருமாம்பாக்கம் கிராம பஞ்சாயத்திலும், 11.30 மணிக்கு மணப்பட்டு கிராம பஞ்சாயத்திலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டங்களில் தொடர்புடைய துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் பங்கேற்று தங்களது கிராமங்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை