உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு

வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் இரு இடங்களில் புதிய மின் டிரான்ஸ்பார்மரை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் இயக்கி வைத்தார்.ஊசுடு தொகுதி குருமாம்பேட், அமைதி நகர் மற்றும் சிவசக்தி நகர் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையை போக்கும் வகையில் மின்துறை சார்பில் ரூ. 49 லட்சம் செலவில் இரு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் சாய்சரவணன்குமார் இயக்கி வைத்தார். இந்த டிரான்ஸ்பார்ம் மூலம் அமைதி நகர் மற்றும் சிவசக்தி நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறுவர்.நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி