மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆலோசனை கூட்டம்
11-Dec-2024
அரியாங்குப்பம் : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா, நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில், அனுமதி பெற வேண்டும்.இதுகுறித்து, அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கொம்யூனில் அனுமதி பெற வேண்டும். தனியார் ஓட்டல்கள், விடுதிகள், பொது இடங்களில், இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால், கேளிக்கை வரி, வர்த்தக உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும்.பொது இடங்களில் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், கலெக்டர், எஸ்.பி., அலுவலகம், கலால் துறை, தீயணைப்பு ஆகிய துறைகளில் இருந்து அனுமதி பெற வேண்டும். புத்தாண்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் கலாசாரத்தை மீறியோ, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் இருந்தால், அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-Dec-2024