இந்திய கம்யூ., மாநிலக்குழு கூட்டம்
புதுச்சேரி : இந்திய கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சலீம் அரசியல் நிலைபாடு குறித்து பேசினார்.தேசிய செயலாளர் நாராயணா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா. கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, மாநில குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அபிஷேகம், கீதநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரி மாநில அந்தஸ்து பிரச்னையில் முதல்வர், மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக போராட முன் வரவேண்டும். அரசு துறைகளில் பெருகி வரும் ஊழல்களை தடுத்திட லஞ்ச ஒழிப்பு பிரிவு முனைப்புடன் செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசு பணியாளர் தேர்வுகளில் இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைய அமலாக்கப் பிரிவை வலுப்படுத்த வேண்டும்.ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகை கடன் திட்டத்தில் புதிய வழிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.