மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ., கலந்துரையாடல்
07-Feb-2026
புதுச்சேரி: பா.ஜ., சார்பில், சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. புதுச்சேரி தனியார் ேஹாட்டலில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அர்ச்சகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கோவில் அர்ச்சகர்கள் நல வாரியம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக, அமைச்சர் வாக்குறுதி அளித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., விக்கிரமன், மாநில துணைத்தலைவர் அமாவாசை, மாநில செயற்குழு உறுப்பினர் பத்மநாபன், மகளிர் அணி பொறுப்பாளர், ஸ்ரீமதி, ஜெயந்தி, கோவில் மற்றும் ஆன்மிக பிரிவு அமைப்பாளர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மாநில ஓ.பி.சி., அணி தலைவர் கோவேந்தன் செய்திருந்தார்.
07-Feb-2026