உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து பாதிப்பு

காந்தி வீதியில் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. காந்தி, புதுச்சேரி.

சிக்னல் விளக்கு எரியுமா?

மரப்பாலம் சந்திப்பில் சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மதிவாணன், புதுச்சேரி.

சுகாதார சீர்கேடு

தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ரவி, தவளக்குப்பம்.

துர்நாற்றம் வீசுகிறது

கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில், காலிமனையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.கண்ணன், கொம்பாக்கம்.

கழிவுநீர் வாய்க்கால் சேதம்

செயின்ட் தெரேஸ் வீதியில், சாலையில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் பெயர்ந்து இருப்பதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. முகேஷ், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ