புகார் பெட்டி..
விபத்து அபாயம்
அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் தெரு விளக்கு எரியாமல், இரவில் அப்பகுதி இருண்டு கிடப்பதால்,வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மோகன், அரும்பார்த்தபுரம். சிக்னல் விளக்கு எரியுமா?
இந்திரா சிக்னலில் சரியாக சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.மணி, புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு
அண்ணா சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து, இடையூறு ஏற்பட்டு வருகிறது.மதி, புதுச்சேரி. மின் விளக்கு தேவை
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலையில், தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.சரவணன், தவளக்குப்பம். பயணிகள் அவதி
அரியாங்குப்பத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கிரண், அரியாங்குப்பம்.