மேலும் செய்திகள்
வள்ளலார் அவதார விழா
05-Oct-2024
கணுவாப்பேட்டை பகுதியில் குப்பை வண்டிகள் சரியாக வராததால், குப்பைகள் சாலையில் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.லட்சுமி, கணுவாப்பேட்டை. ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
வில்லியனுார், கோட்டைமேடு- உறுவையாறு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். செல்வம், வில்லியனுார். சாலையில் ஆபத்தான பள்ளம்
லிங்காரெட்டிப்பாளையம் சாராயக்கடை எதிரே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலமுருகன், லிங்காரெட்டிப்பாளையம். பகலிலும் எரியும் விளக்கு
செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் எதிரேயுள்ள மினிமாஸ் விளக்குகள் பகலில் எரிந்து வருவதால் மின்சாரம் விரயமாகிறது.சங்கர், செட்டிப்பட்டு. சாலை சீர்கேடு
பண்டசோழநல்லுார், அம்பேத்கர் வீதி- சுடுகாடு செல்லும் சாலை சேரும், சகதியுமாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விஜய்சரண், பண்டசோழநல்லுார்.
05-Oct-2024