உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

வாகன நெரிசல்

வில்லியனுார் மூர்த்தி நகர், கூடப்பாக்கம் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.அருண், வில்லியனுார்.

மின் விபத்து அபாயம்

லாஸ்பேட்டை, அவ்வை நகர், 2வது மெயின் ரோடு வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பியின் மீது மரக்கிளைகள் உரசி செல்கிறது. மின் விபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீனதயாளன், லாஸ்பேட்டை.

நாய்கள் தொல்லை

ஊசுடு தொகுதி, ராமநாதபுரம் ரெட்டியார் தெருவில், நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.மகாலட்சுமி, ராமநாதபுரம்.

தெரு விளக்கு எரியுமா?

திருபுவனை திருமுருகன் நகரில், தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.சாந்தி, திருபுவனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி