புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
பாரதி வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பாலாஜி, புதுச்சேரி. குண்டும் குழியுமான சாலை
மணவெளி பகுதியில் சாலை குண்டும், குழியுமாக, ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.மீனா, மணவெளி.அரியாங்குப்பம், போலீஸ் ஸ்டேஷன் அருகே மெகா பள்ளங்கள் இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.ராகவன், அரியாங்குப்பம். சிக்னல் பழுது
ராஜிவ், இந்திரா சதுக்கத்தில், சிக்னல் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.ஆனந்தன், புதுச்சேரி. வாகன ஓட்டிகள் அவதி
முதலியார்பேட்டை, காராமணிக்குப்பம் ரயில்வே கேட்டில், உள்ள சிமென்ட் கட்டைகள் பெயர்ந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு, முதலியார்பேட்டை. கழிவுநீர் தேக்கம்
காமராஜர் சாலை, பிருந்தாவனத்தில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.ஸ்ரீதர், பிருந்தாவனம்.