புகார் பெட்டி..
சாலைப் பணி மந்தம்
நைனார்மண்டபத்தில், சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கருணாமூர்த்தி, புதுச்சேரி. போக்குவரத்து இடையூறு
நெல்லித்தோப்பில் தற்காலிகமாக உள்ள மீன் மார்கெட்டில், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.சுரேந்தர், நெல்லித்தோப்பு. மின்விபத்து அபாயம்
லாஸ்பேட்டை, அவ்வை நகர், 2வது மெயின் ரோடு வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பியின் மீது மரக்கிளைகள் உரசி செல்வதால் மின், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி, லாஸ்பேட்டை. நாய்கள் தொல்லை
ஊசுடு தொகுதி, ராமநாதபுரம் ரெட்டியார் தெருவில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மகாலட்சுமி, ராமநாதபுரம்.