உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலைப் பணி துவங்குமா?

தேங்காய்த்திட்டு, மெயின் ரோட்டில், சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்டு, பணிகள் நடக்காமல் இருந்து வருகிறது.ஏழுமலை, தேங்காய்த்திட்டு.

பன்றி தொல்லை

காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் பன்றிகள் அதிகமாக சுற்றி திரிவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.சபிதா, காலாப்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

ஜீவானந்தபுரம் - கம்பளி மடம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராணி, ஜீவானந்தபுரம்.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

முதலியார்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.முரளி, முதலியார்பேட்டை.

கடைகள் ஆக்கிரமிப்பு

மூலக்குளத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் சாலை, தனியார் மருத்துவமனை அருகே கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணி, மூலக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !