உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

மண் குவியலால் விபத்து கடலுார் சாலையில் ஆங்காங்கே மண் குவியலாக கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கணேசன், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை வேல்ராம்பட்டு மறைமலை நகர், 6வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சிவராம், வேல்ராம்பட்டு. போக்குவரத்துக்கு இடையூறு வீராம்பட்டினம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சிவராஜ், வீராம்பட்டினம். தெரு விளக்கு எரியுமா? புதுச்சேரி, கிருஷ்ணா நகர், 15வது குறுக்கு தெருவில், தெருவிளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. புஷ்பா, கிருஷ்ணா நகர். சேதமடைந்த சாலை சித்தன்குடி சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குமரன், சித்தன்குடி. கொசு தொல்லை கோர்க்காடு படையாச்சி வீதியில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, கொசு தொல்லை அதிகமாக உள்ளது. வரதன், கோர்க்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ