புகார் பெட்டி: கழிவுநீர் தேக்கம்
ராஜ்பவன், குபேர் பாடசாலை தெருவில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கல்யாணம், ராஜ்பவன்.சுகாதார சீர்கேடு பத்துக்கண்ணு - தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ராஜ்குமார், தொண்டமாநத்தம். சாலையில் குப்பைகள் நெல்லித்தோப்பு வேல்முருகன் நகர், 2வது மெயின் ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சுமதி, நெல்லித்தோப்பு. மின் விளக்குகள் எரியுமா? அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. கபிலன், அரியாங்குப்பம். போக்குவரத்து நெரிசல் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கிருஷ்ணா, மரப்பாலம். ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராஜ், புதுச்சேரி. கால்களை பதம் பார்க்கும் மது பாட்டில் ஓடுகள் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை வீசி செல்வதால், உடைத்த பாட்டில் மக்களின் கால்களில் காயம் ஏற்படுத்தி வருகிறது. சுந்தர், தட்டாஞ்சாவடி.