உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் கழிவுநீர் தேக்கம்

சாலையில் கழிவுநீர் தேக்கம்

சாலையில் கழிவுநீர் தேக்கம்: காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தனலட்சுமி, ரெயின்போ நகர்தெரு விளக்கு எரியவில்லை: திருவண்டார் கோவில் முருகன் கோவில் வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சின்னபொன்னு, மண்ணாடிப்பட்டு. மூலக்குளம் மோதிலால் நகர் 3வது குறுக்கு தெருவில் பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் உள்ளது. அருண்குமார், மூலக்குளம். புதர்கள் மண்டி கிடக்கிறது: கதிர்காமம் ராகவேந்திரா நகர் 4வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது. பிரித்திவிராஜ், கதிர்காமம். ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மோகன்ராஜ், புதுச்சேரி. மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இரவு நேரங்களில் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அருண், தட்டாஞ்சாவடி. டவுன் பஸ் தேவை: புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கண்மணி, கோரிமேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை