மேலும் செய்திகள்
புதுச்சேரி: புகார் பெட்டி
26-May-2026
வில்லியனுார், மூலக்கடை சிக்னல் இயங்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ரஜினி முருகன், வில்லியனுார்.கழிவுநீர் தேங்கி நிற்கிறது லாஸ்பேட்டை, மெயின் ரோடு, கொட்டுப்பாளையம் வாய்க்காலில் மரத்தின் வேர் சாய்ந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.வீதியில் குப்பைகள் கொசப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குப்பைகள் சிதறி கிடக்கிறது. மகேந்திரன், கொசப்பாளையம். தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் சாலையில் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். டவுன் பஸ் தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் வசதி இல்லாமல் இருப்பதால் மரப்பாலம் சந்திப்பில் இருந்து பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். ராஜேஷ், புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல் ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மோகன், புதுச்சேரி.
26-May-2026