உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு

பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது: லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. புவனேஷ், லாஸ்பேட்டை குப்பை வண்டி வருவதில்லை: காலாப்பட்டு பாரதி நகர் 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது. கணேசன், காலாப்பட்டு.வாகன நிறுத்துவதால் இடையூறு: முதலியார்பேட்டை ரோடியர் மில் ரோட்டில் இருபுறத்திலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறாக உள்ளது. முகேஷ், முதலியார்பேட்டை. மரக்கிளைகளால் ஆபத்து: லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் பகுதியில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கமலா, லாஸ்பேட்டை சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கலியபெருமாள், மூலக்குளம். தெரு நாய்கள் தொல்லை: உழவர்கரை ஜவகர் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ரஜினி, உழவர்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !