உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரக்கிளைகள் விழுவதால் விபத்து

மரக்கிளைகள் விழுவதால் விபத்து

மரக்கிளைகள் விழுவதால் விபத்து: வில்லியனுார் சாலை பகுதியில் உள்ள மரக்கிளைகள் காய்ந்து கீழே விழுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. ரஜினி முருகன், வில்லியனுார்.சாலையில் கழிவுநீர்: முத்தியால்பேட்டை குட்டி கிராமணி தெருவில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சம்பந்தம், முத்தியால்பேட்டை.தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் தெரு நாய்கள் சாலையில் நிற்பதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. விஜயக்குமார், புதுச்சேரி போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராஜேந்திரன், அரியாங்குப்பம். சாலையில் ஆக்கிரமிப்பு: திலாசுபேட்டை சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேன்மொழி, திலாசுபேட்டை சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கலியபெருமாள், மூலக்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !