UPDATED : செப் 07, 2026 11:13 PM | ADDED : செப் 07, 2026 10:55 PM
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் சாலை மோசமான நிலையில் உள்ளது. தனலட்சுமி, ரெயின்போ நகர். புதர்கள் மண்டியுள்ளது: பிருந்தாவனம் 7வது குறுக்கு தெருவில் உள்ள காலி மனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. ராஜகோபாலன், பிருந்தாவனம். மேம்பாலத்தில் மழைநீர் தேக்கம்: வில்லியனுார் ஆரியப்பாளையம் புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ரஜினிமுருகன், வில்லியனுார். காலி இடத்தில் குப்பைகள்: குண்டுபாளையம் நவசக்தி நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குணசேகரன், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். செல்வகுமார், தட்டாஞ்சாவடி. குண்டும் குழியுமான சாலை காரமணிக்குப்பம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ரஜினி, காரமணிக்குப்பம்.