அரசு பள்ளிக்கு கணினி
புதுச்சேரி: குருசுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பாண்டிச்சேரி ரிவெஜ் லேடிஸ் தலைவி மீனாட்சி, ஸ்ரீமன் இன்டர்நேஷனல் பள்ளி இயக்குனர் நிவேதா விஜயரங்கன் ஆகியோர் பள்ளிக்கு கணினி நன்கொடையாக வழங்கினர். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி, பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.