மேலும் செய்திகள்
பாரதிதாசன் கல்லுாரியில் சிறப்பு சொற்பொழிவு
28-Feb-2025
புதுச்சேரி; பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி, தமிழ்த்துறையின் கணித்தமிழ்பேரவை சார்பில் இரண்டு நாள் கணினித்தமிழ் பயிலரங்கம் துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன கணிப்பொறித் துறை பேராசிரியர் கண்ணதாசன், குறுஞ்செயலி உருவாக்கமும், பயன்பாடும் குறித்து சிறப்புரையாற்றினார்.தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்கவுரையாற்றினார். கணித்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார்.மாணவி ரீட்டா மரி திரெஸ் தொகுத்து வழங்கினார்.பயிலரங்கில் முனைவர்கள் வஜ்ரவேலு, பட்டம்மாள் ஆகியோர் கணினி - இணைய உருவாக்கம், பயன்பாட்டில் பெண்களின் பங்கு குறித்தும், முனைவர்கள் சந்திரா, ஆரோக்கிய மேரி ஆகியோர் கட்டற்ற மென்பொருள் - அறிமுகம், பயிற்சி குறித்தும் பேசினர்.மாணவி தேவதர்ஷினி நன்றி கூறினார்.
28-Feb-2025