உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலீடு இல்லாமல் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டிய கான்பெட் நிறுவனம்

முதலீடு இல்லாமல் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டிய கான்பெட் நிறுவனம்

பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் புதுச்சேரி கொக்கு பார்க் சந்திப்பில் உள்ள மைதானத்தில் தீபாவளி சிறப்பு அங்காடி திறந்து பட்டாசு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்து வந்தது.இதற்கு மளிகை மற்றும் பட்டாசு பொருட்களை கொடுத்த நிறுவனங்களுக்கு சரிவர தொகை வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டதால் புதுச்சேரி தீபாவளி அங்காடிக்கு கடனில் பட்டாசு தர முன்வராததால், சில ஆண்டுகள் தீபாவளி அங்காடி செயல்படவில்லை.கடந்தாண்டு தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் கூட்டுறவு நிறுவனம் சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடியில் பட்டாசு விற்பனை செய்ய முடிவெடுத்து புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு விற்பனையாளரிடம் முன்பணம் எதுவும் தராமல் 25 சதவீத கமிஷன் தொகை வைத்து ஸ்டாண்டர்ட் நிறுவன பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்தது.இதில், விற்காத பட்டாசுகளை அந்த விற்பனையாளரே திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். நிறுவனத்திற்கு தரவேண்டிய 25 சதவீத கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு அசல் தொகையை விற்பனையாளருக்கு வழங்கி விட்டது. அதேபோன்று இந்த ஆண்டும் கான்பெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரி கொக்கு பார்க் மைதானம், காந்தி வீதி, காரைக்கால் ஆகிய மூன்று இடங்களில் 15 நாட்கள் தீபாவளி சிறப்பு அங்காடியை நடத்தியது.அதில், மொத்தமாக ரூ. 2 கோடிக்கு பட்டாசு விற்பனையானது. இதில் கான்பெட்டிற்கு கமிஷன் தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது. இந்த தொகையைக் கொண்டு கான்பெட், அமுதசுரபி ஊழியர்களுக்கு மேலாண் இயக்குனர் ஐயப்பன் முயற்சியால் சம்பளம், போனஸ், அங்காடியில் பணிபுரித்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி