சங்கு ஊதி போராட்டம்
புதுச்சேரி,:புதுச்சேரி, பொதுப்பணித் துறையில் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அலு வலகம் எதிரே சங்கு ஊதி போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீராசாமி, குணசேகரபாண்டியன், ஆபிரகாம் லுார்துசாமி, சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி மறுகட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். போர்மேன் பதவிக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள 950 எம்.டி.எஸ். பதவிகளில் வாரிசுதாரர், வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன.