மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
28-Sep-2024
புதுச்சேரி: ஏனாமில் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஏனாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிகடைகளை சோதனை செய்த போது, ஆந்திராவை சேர்ந்த அதிலிதன ராஜூ, 40; என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து, அதிலிதன ராஜூ கைது செய்த போலீசார், ரூ.1480 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28-Sep-2024