உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏலச்சீட்டு பணம் கொடுக்காததால் மோதல்; 14 பேர் மீது வழக்கு பதிவு

ஏலச்சீட்டு பணம் கொடுக்காததால் மோதல்; 14 பேர் மீது வழக்கு பதிவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்காததால், ஏற்பட்ட மோதலில் கோர்ட் உத்தரவின் படி 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.வில்லியனுார் அடுத்த கூடப்பாபாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி உமா, 46; டைலரிங் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சிலரை சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல், பணத்திற்கான வட்டியை கொடுத்து வந்தார். மேற்கொண்டு சீட்டு கட்டி பணம் கிடைக்காதவர்களும், உமாவிடம் பணம் கேட்டு, கடந்த ஆண்டு செப்., 17ம் தேதி டைலர் கடையை முற்றுகையிட்டு, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து உமா வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். இது சிவில் பிரச்னை என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் கோர்ட்டுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, புதுச்சேரி கோர்ட்டில் உமா வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் நேற்று உமாவிடம் பிரச்னையில் ஈடுபட்ட கூடப்பாக்கம் செந்தில், முரளி, சதீஷ், மல்லிகா, விமலா, தனலட்சுமி, குமார், அஞ்சாலாட்சி, உஷா, ரேவதி, கல்பனா, ஜோதி, பாக்கியம் உட்பட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ