லாரிகள் சிறைபிடிப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
நடுவீரப்பட்டு : சேதமடைந்த சாலையை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளத்தில் செம்மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிகளுக்கு அதிகளவு கனரக லாரிகள் வந்து சென்றதால் சாலைகள் சேதமடைந்தது. இதனால் இந்த சாலை வழியாக விவசாய நிலத்திற்கு செல்லும் விவசாயிகள் அவதியடைந்தனர்.இதனால் பொதுமக்கள் நேற்று காலை குவாரிக்கு வந்த லாரிகளை சிறை பிடித்து, சாலையை சரி செய்திட வலியுறுத்தினர்.தகவலறிந்த குவாரி உரிமையாளர்கள் சாலையை சரி செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.