உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

 தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுதேர்வை 16 மாணவர்கள் எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் மாணவி தாரிணி முதலிடத்தையும், மாணவி அக் ஷயா இரண்டாம் இடத்தையும், மாணவி காவியா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கி, சாதனை மாணவர்களை பாராட்டினார். பள்ளி பொறுப்பாசிரியர் எழில்மாறன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி