உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுனிதா வில்லியம்சிற்கு வாழ்த்து

சுனிதா வில்லியம்சிற்கு வாழ்த்து

புதுச்சேரி: விண்வெளியில் தங்கி இருந்து, பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சை அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு வாழ்த்தியுள்ளது. மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் அறிக்கை: விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை இந்தியா செய்து வரும், சிறப்பான நேரத்தில் 286 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பி இருக்கும் சுனிதா வில்லியம்சை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருப்பது நாட்டிற்கு பெருமை ஆகும். அவரது சாதனை விண்வெளி துறையில் தொடர்ந்து நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். சுனிதா வில்லியம்ஸின் மன உறுதியும், துணிச்சல் மிகுந்த பயணமும் பெண்களுக்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ