காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரருக்கு வாழ்த்து
திருபுவனை: தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் பவர் லிப்டிங் (வளு துாக்கும்) சேம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி மாணவர் விஷாலுக்கு கல்லுாரியின் என்.சி.சி., மாணவர்கள் அணி வகுப்பு மரியாதையுடன் வாழ்த்து தெரிவித்தனர்.காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்ரிக்கா நாட்டில் கடந்த 3ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியின் பி.பி.ஏ., (சுற்றுலாத்துறை) முதலாம் ஆண்டு மாணவர் விஷால் 59 கிலோ எடைப் பிரிவில் ஸ்குவார்டு-125, டெஞ்ச்-85, டெட்-160 கிலோ, என மொத்தம் 370 கிலோ எடையை துாக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இதையொட்டி கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் பேராசிரியர் கதிர்வேல் தலைமையில் மாணவர்கள் அணி வகுப்பு மரியாதையுடன் மாணவர் விஷாலை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.