கோ- கோ போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
புதுச்சேரி: பள்ளிக்கல்வி இயக் கம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டி ஏனாமில் நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், கோ-கோ போட்டியில் கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அஜய், ஜோஷ்வா, பிரவின்குமார், நிதிஷ், கோகுலன், பரதன் ஆகியோர் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். இதையடுத்து, பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாசு, கணபதி, உடற்கல்வி ஆசிரியர் ஞானவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.