உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோ - கோ போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

 கோ - கோ போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

புதுச்சேரி: மாநில அளவிலான கோ -- கோ போட்டியில் வெற்றி பெற்ற தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரியில் நடந்தது. இதில் வட்டம் - 2 சார்பில், கோ - கோ போட்டி குழுவில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் விஷாலினி, தஷினி, கீதாலட்சுமி, கீர்த்தி, லாவண்யா, ஆர்த்தி, லோஷிமா, கேஷினி ஆகிய 8 மாணவிகள் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த அவர்களை தலைமையாசிரியர் நிலை - 1 வாசு, தலைமையாசிரியர் நிலை - 2 கணபதி, பொறுப்பாசியை சுகன்யா, உடற்கல்வி ஆசிரியர் ஞானவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !