காங்., ஓ.பி.சி., அணி மாநில தலைவர் நியமனம்
புதுச்சேரி: புதுச்சேரி காங்., ஓ.பி.சி., அணியின் மாநில தலைவராக அமுதரசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி காங்., ஓ.பி.சி., அணியின் மாநிலத் தலைவராக டாக்டர் அமுதரசனை, நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு, காங்., தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான, அறிவிப்பை காங்., பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, அமுதரசன் கூறுகையில் ‘புதுச்சேரி காங்., ஓ.பி.சி., அணி மாநிலத் தலைவராக தன்னை நியமனம் செய்த, காங்., தலைமைக்கு நன்றி. இதற்கு உறுதுணையாக இருந்த காங்., மூத்த தலைவர் சோனியா, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலாளர்கள் பிரியங்கா, வேணுகோபால், புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி. புதுச்சேரியில் ஓ.பி.சி., அணியை வலுப்படுத்தி, கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் முழுமையாகப் பணியாற்றுவேன்’ என்றார்.