மண்ணாடிப்பட்டு தொகுதியில் காங்., வேட்பாளர் ஓட்டு வேட்டை
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் இண்டி கூட்டணி காங்., வேட்பாளர் செல்வம் மணவெளி கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று கொடாத்துார் மணவெளி கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கிராம மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க கடந்த 5 ஆண்டுகளாக யாரை பார்ப்பது என தெரியாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரித்தனர். அதற்கு, வேட்பாளர் செல்வம் தேர்தலில் தன்னை 'கை' சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தால், எப்பொழுது வேண்டுமானாலும், தன்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, உறுதியளித்தார். இதில், இண்டி கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.