உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., வேட்பாளர் சிவசங்கர் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் சிவசங்கர் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர் நேற்று ரோஜா நகர், புது நகர், கணபதி நகர், அரும்பார்த்தபுரம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளில், ரூ.165 கோடிக்கு மேலாக வளர்ச்சி பணிகளை செய்து உழவர்கரையை முன்மாதிரியாக மாற்றி அமைத்துள்ளேன். உழவர்கரையில், சி.எஸ்.ஆர்., உள்ளிட்ட நிதிகளில் 4500 எல்.இ.டி., தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி., நிதியில் ரூ. 2 கோடி செலவில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 21 கோவில்கள் புனரமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் நமது தொகுதியை கொலை, கொள்ளை இல்லாத பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம். புது நகரில் ரூ. 4 கோடி செலவில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது. இப்பணிகள் தொடர வரும் தேர்தலில் கை சின்னத்தில் ஓட்டு போட்டு தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை