உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்

 தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணி குறித்து காங்., தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்., வி.சி., கம்யூ., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. காங்., தி.மு.க., கூட்டணி பங்கீடு, குறித்து பேசுவதற்கு காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினை காங்., நியமித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்., செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தொலைபேசி மூலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை