காங்., தி.மு.க.,விற்கு சரிபாதி சீட்? இ.கம்யூ., - வி.சி., தலா ஒன்று?
புதுச்சேரி இண்டி கூட்டணியில் காங்., - தி.மு.க.,விற்கு சரிபாதியாக சீட்டு பிரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இண்டி கூட்டணியில் உள்ள காங்., தி.மு.க., இடையே கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிவடையாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இதே இண்டி கூட்டணியில் உள்ள காங்., - தி.மு.க., விற்கு எத்தனை சீட்டுகள் பிரிக்கப்படும் என்ற தகவல் கட்சியினரிடையே பரவலாக கூறுவது, காங்., கிற்கு 14, தி.மு.க., விற்கு 14, கூட்டணியில் உள்ள இ.கம்யூ.,1, வி.சி.,க்கு 1 என, மொத்தம் 30 தொகுதியை பிரிக்கப்படும் என, கூறுகின்றனர். இதே நேரத்தில் கடந்த தேர்தலில் இ.கம்யூ., விற்கும் வழங்கப்பட்ட தட்டாஞ்சாவடி மீண்டும் அவர்களுக்கும், உழவர்கரை தொகுதி வி.சி.,யினருக்கு வழங்கப்படும் என, தெரிகிறது. ஆனால் இந்த இரண்டு தொகுதியிலும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்த காங்., மற்றும் தி.மு க.,வினர் தொகுதி தங்களுக்கு கிடைக்காது என, தெரிந்தவுடன் சைலண்ட் மோடிற்கு சென்று விட்டனர். இதேபோல் சில தொகுதிகளில் ஆர்வம் காட்டியவர்கள் சைலன்ட் மோடிற்கு ஏன் சென்றனர் ஏன புரியாமல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.