காங்., நிர்வாகிகள் கூட்டம்
புதுச்சேரி : தேர்தல் தொடர்பாக, காங்., அலுவலகத்தில், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில் நடந்தது.முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் குமரன், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.