உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது போலீசில் காங்கிரசார் புகார்

ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது போலீசில் காங்கிரசார் புகார்

முத்தியால்பேட்டை:முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அப்துல்ரகுமான் அளித்த புகார்:இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில், கடந்த 2024, டிச., 31ம் தேதி, இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பரத் பாலாஜி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.இது, காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆறாத வடுவாக மாறியுள்ளது. எனவே, பரத் பாலாஜியை கைது செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ