மேலும் செய்திகள்
உழவர்கரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
01-Oct-2024
புதுச்சேரி: உழவர்கரையில் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் காங்., பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி உழவர்கரை விவேகானந்த வீதியைச் சேர்ந்தவர் தாண்டவம் 61, உழவர்கரை தொகுதி காங்., பிரமுகர். இவர் நேற்று இரவு 10 மணிக்கு தனது ஸ்கூட்டியில் மூலகுளத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது ரெட்டியார்பாளையத்தில் இருந்து வேகமாக பைக்கில் வந்த ஒருவர், தாண்டவம் ஸ்கூட்டி மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட தாண்டவத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விபத்து குறித்து போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Oct-2024