ராஜ்பவன் தொகுதியில் காங்., பாதயாத்திரை
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிகாங்., சார்பில் பாதயாத்திரை நேற்று நடந்தது. வரும் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு காங்., சார்பில் ஆளும் கட்சியின் ஊழலை மக்களுக்கு விளக்கும் வகையில், தொகுதி வாரியாக பாத யாத்திரைசென்று பிரசாரம் மேற்கொள்ளும் இயக்கம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. 2வது நாளாக நேற்று ராஜ்பவன் தொகுதியில் பாதயாத்திரை நடந்தது.காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பாதயாத்திரையைதுவக்கி வைத்தனர். மகளிர் அணி தலைவி நிஷா, வழக்கறிஞர் அணிமாநில தலைவர்மருது பாண்டியன்,தொகுதி செயலாளர் குமரன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பாதயாத்திரையில் பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும், போலி மருந்து முறைகேடு குறித்தும் ஆளும் அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.