தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு காங்., செயலாளர் ஆறுதல்
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காங்., செயலாளர் குமரன் சந்தித்து ஆறுதல் கூறினார். ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுக்குப்பம் மரவாடி வீதி சர்ச் அருகில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அருகருகே இருந்த இரண்டு வீடுகளின் மொட்டை மாடியில் தீ பரவி, சேதமடைந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்த மாநில காங்., செயலாளர் குமரன் தீ விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காங்., கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.