/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாஜ., தேர்தல் அலுவலகம் திறப்பதற்குள் அ.தி.மு.க.,விற்கு கைமாறிய தொகுதி
பாஜ., தேர்தல் அலுவலகம் திறப்பதற்குள் அ.தி.மு.க.,விற்கு கைமாறிய தொகுதி
புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., விற்கு ஒதுக்கீடு செய்து கட்சி அலுவலகம் திறப்பதற்குள், தொகுதியே அ.தி.மு.க.,வுக்கு கைமாறிய வினோத சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., - 16, பா.ஜ., - 10, அ.தி.மு.க., -2 ல.ஜ.க., - 2 என தொகுதிகள் பிரிக்கப்பட்டு நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டது. இதில், பா.ஜ.,வின் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் 10வது தொகுதியாக உருளையன்பேட்டை தொகுதிக்கு பாஜ., வேட்பாளரை தேர்வு செய்து, அந்த வேட்பாளரும் தேர்தல் பணிக்காக கட்சி அலுவலகம் அமைக்க இடம் தயார் செய்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை உருளையன்பேட்டை தொகுதி திடீரென அ.தி.மு.க.,விற்கு கை மாறி விட்டது. தொகுதி ஏன் கை மாறியது என புரியாமல் பா.ஜ., வினர் குழப்பத்தில் உள்ளனர்.